×

பாலியல் புகாரில் சிறப்பு டிஜிபி-யை கைது செய்ய வலியுறுத்தி மதுரையில் மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மதுரை: பெண் காவல்துறை அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கி இருக்கும் சிறப்பு டிஜிபி-யை கைது செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினரை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அனைத்திந்திய மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அப்போது காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் அவர்கள் கண்டன முழுக்கங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண்களையும், இளைஞர்களையும் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கைது செய்த போது போராட்டம் நடத்தியவர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.  பெண் காவல்துறை அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கி இருக்கும் சிறப்பு டிஜிபி-யை கைது செய்ய கோரி பல இடங்களில் போராட்டம் வலுத்து வருகிறது.Tags : Maduro ,DGP , Student organizations protest in Madurai demanding the arrest of a special DGP in a sexual harassment case
× RELATED குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை...