41-லிருந்து 25 தொகுதியாக குறைந்துள்ளோம்: நாங்கள் கேட்கும் தொகுதிகளை கொடுத்தால் ஒப்பந்தத்துக்கு வருவோம்...தேமுதிக துணைச்செயலாளர் பார்த்தசாரதி பேட்டி.!!!

சென்னை: நாங்கள் கேட்கும் தொகுதிகளை கொடுத்தால் ஒப்பந்தத்துக்கு வருவோம் என தேமுதிக நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் துணைச்செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.  தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனால், திமுக, அதிமுகவினர் கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, அதிமுக-தேமுதிக இடையே தொகுதி பங்கீடு இழுபறியாக உள்ளது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த  தேமுதிக துணைச்செயலாளர் பார்த்தசாரதி, தேமுதிக சார்பில் 5 பேர் கொண்ட குழு தொகுதி பங்கீடு குறித்து பேச அமைக்கப்பட்டுள்ளது.

இதில் 3 பேர் இரண்டு கட்டமாக  அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். எங்கள் தலைவர் கேட்ட தொகுதிகளை கேட்டுள்ளோம். ஆனால், அதிமுக தொகுதி குறைவாக சொல்கிறது. எனவே, 2 கட்ட  பேச்சுவார்த்தையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எங்கள் இலக்கிற்கு ஒப்புக்கொண்டால், கையெழுத்திட வருவோம் என்றும் தெரிவித்தார். 2019-ம் ஆண்டு முதல் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என தேமுதிக பொருளாளர் பிரமலதா விஜய்காந்த் மற்றும் தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் தெரிவித்து  வருகின்றனர். இன்று வரை அதிமுகவுடன்தான் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எண்ணிக்கை முடிவான பின்புதான் தொகுதி குறித்து பேச முடியும். கூட்டணியில் பாமக,  பாஜக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. பின்னர் தொகுதி குறித்து பேசி முடிவு செய்வோம். 2011-ம் ஆண்டு ஜெயலலிதா இருந்தபோது, 41 தொகுதி தேமுதிக சார்பில் கேட்கப்பட்டது.

இதனைபோன்று, இந்த முறையும் 41 தொகுதி கேட்டுள்ளோம். ராஜசபா சீட் கேட்டது உண்மைதான். சீட் கொடுப்பதாக அதிமுக சொல்லியுள்ளது. இன்னும் 2 நாளில் பேச்சுவார்த்தை  முடிவடையும். 41 தொகுதிகள் நாங்கள் கேட்டுள்ளோம், ஆனால், கூட்டணியில் இரண்டு பெரிய கட்சிகள் உள்ளது. எனவே, பகிர்ந்து குறைவாக இடம் கேட்க அதிமுக கூறியது.  தற்போது நாங்களும் தொகுதிகளை குறைத்துள்ளோம். 41 தொகுதியில் இருந்து 25 தொகுதி வரை நாங்கள் கேட்டுள்ளோம். எனவே, பேச்சுவார்த்தை மூலம் தொகுதி பேசி  முடிப்போம் என்றும் தெரிவித்தார்.

Related Stories: