×

கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட விருப்பமனு தாக்கல்

சென்னை: கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட விருப்பம் தெரிவித்து கார்த்தி சிதம்பரம் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கட்சியின் மாநில தேர்தல் குழு முன் பிரியங்கா காந்தியின் விருப்பமனுவை தாக்கல் செய்து உள்ளார். கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

ஆதாவது கன்னியாகுமரி மக்களவை தொகுதி எம்.பி.யாக இருந்த வசந்தகுமார் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். இதனால் கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

இந்தநிலையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்பமனு தாக்கல் கடந்த 9 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இன்று மறைந்த முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தனது விருப்பமனுவை தாக்கல் செய்து இருந்தார்.

அவரை தொடர்ந்து பிரியங்கா காந்தி கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனுவை காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்துள்ளார். இதனை தொடர்ந்து பிரியங்கா காந்தி இன்னும் சில நாட்களில் தமிழகத்தில் அவருடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக தகவல்களும் வெளியாகியுள்ளது.


Tags : Priyanka Gandhi , Priyanka Gandhi files nomination for Kanyakumari Lok Sabha by-election
× RELATED கன்னியாகுமரி மற்றும் அதன்...