பாஜக தலைமையிலான பிரிவினைவாத சக்திகளை தோற்கடித்தாக வேண்டும் : காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி பேச்சு

சென்னை : திமுக கூட்டணியில் கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்கும் என்று வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் பட்டியல் என தமிழக அரசியல் கட்சிகள் ஆயத்தம் ஆகி வருகின்றனர். இந்த நிலையில், தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்க சென்னை சத்யமூர்த்தி பவனில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்ட ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் மேற்பார்வையாளர் வீரப்ப மொய்லி, காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு இன்று அல்லது நாளைக்குள் முடிவாகும்.திமுக கூட்டணியில் கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்கும். தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஓரணியில் திரண்டு நிற்பதால் மதச்சார்பின்மைக்கு வழி சேர்க்கும்.பாஜக தலைமையிலான பிரிவினைவாத சக்திகளை தோற்கடித்தாக வேண்டும். தமிழகத்தில் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றுபட்டு இருக்க வேண்டியது அவசியம்.சமுத்திரத்தில் அலைகள் ஏற்றம்,இறக்கம் இருப்பது போல் எங்கும் இருக்கும்,என்றார்.

Related Stories:

>