கமல்ஹாசன் தலைமையில் மூன்றாவது அணிக்கு செல்ல வாய்ப்பே இல்லை!: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திட்டவட்டம்..!!

சென்னை: கமல்ஹாசன் தலைமையிலான மூன்றாவது அணிக்கு மதிமுக செல்ல வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவுடன் பேச்சுவார்த்தை இணக்கமான முறையில் நடைபெறுவதாக குறிப்பிட்டார். திமுக-வுடன் அடுத்தடுத்து 2ம் கட்டமாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ள நிலையில், எழும்பூரில் உள்ள மதிமுக கட்சி  அலுவலகத்தில் வைகோ ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டணி கட்சிகளை திமுக மரியாதையோடு தான் நடத்துகிறது என்று கூறினார்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் பங்கேற்றியிருக்கின்ற மறுமலர்ச்சி  திராவிட முன்னேற்ற கழகம் நம்பிக்கையோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக வைகோ தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கமல்ஹாசன் தலைமையிலான மூன்றாவது அணி அணிக்கு மதிமுக செல்ல வாய்ப்பே கிடையாது என்று திட்டவட்டமாக குறிப்பிட்டார். தொகுதி பங்கீடு குறித்து 3ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக அழைக்கவில்லை. மேலும், விடுதலை சிறுத்தைகள் குறித்து கமல் சொன்னது தவறான கருத்து என்று கூறிய வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை திமுக மரியாதையோடு நடத்தியது என்றார்.

Related Stories: