×

கோபி அருகே வாகன சோதனையில் ரூ.3 லட்சம் சிக்கியது, புதுச்சேரியில் 18 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: தமிழகத்தில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்ட கோடி கணக்கான ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே நம்பியூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 4 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்ததால் பணத்தை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். நம்பியூரை சேர்ந்த பெட்ரோல் பங்க் அதிபர் பழனிசாமிக்கு சொந்தமான பணம் இது என்பது தெரியவந்துள்ளது.

திருப்பத்தூர் அருகே எட்டிகுட்டி பகுதியில் மதுவிலக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 80,000 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக பெங்களூரு மற்றும் ஓசூரை சேர்ந்த 3 பேரை கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலம் மாகி பகுதி கேரளாவில் கோழிக்கூடு அருகே அமைந்துள்ளது. இங்குள்ள சோதனை சாவடியில் கல்லூருக்கு சென்ற வாகனத்தை அதிகாரிகள் செய்த போது 18 கிலோ தங்கம் பிடிபட்டுள்ளது. அதற்கு உரிய ஆவணங்கள் இருந்தாலும் வருமான வரித்துறை ஆய்வுக்காக மாகி வட்டாட்சியர் அலுவலகத்தில் தங்கத்தை வாகனத்துடன் ஒப்படைத்தனர். நகை கடைகளுக்கு ஆபரணங்களை எடுத்து செல்லும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் என்பது தெரியவந்துள்ளது.

Tags : Kobi , Assembly elections, money, jewelry, confiscation
× RELATED திருச்சூர் தொகுதி பாஜ வேட்பாளர்...