'அனிதாவுக்கு 21வது பிறந்தநாள்; அடிமைகள்-பாசிஸ்டுகளை ஓட ஓட விரட்டுவோம்” :உதயநிதி ஸ்டாலின் சூளுரை!!

சென்னை :அரியலூரை சேர்ந்த அனிதா, பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார். ஆனால் 2017ம் கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வில் அனிதாவால் சோபிக்க முடியவில்லை. இதனால் அனிதாவின் மருத்துவர் கனவு கானல் நீராகி போனதை எண்ணி அந்த ஏழை மனம் விம்மியது. எனினும் துக்கம் தாளாமல் அதே ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு தற்போதுவரை நீட் தேர்வுக்கு எதிராக 17 மாணவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். ஆயினும் நீட் தேர்வு நீக்கப்படவில்லை.

இந்த நிலையில், அனிதாவின் 21வது பிறந்தநாளான இன்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில், “இந்திய கிராமப்புற மாணவரின் ஒற்றை பிரதிநிதியாக நீட்டை ஒழிக்க புறப்பட்ட தங்கை அனிதாவின் 21வது பிறந்த நாள் இன்று.நீட் தேர்வாலும் அதை திணித்தவர்களாலும் கூட்டுக்கொலை செய்யப்பட்ட அனிதாவுக்கு நியாயம் கிடைக்க நீட் இல்லா தமிழகம் அமைக்க அடிமைகள்-பாசிஸ்ட்டுகளை விரட்டி கழக அரசை அமைப்போம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது

Related Stories: