பாஜகவுக்கு டஃப் கொடுக்கும் வகையில் 50 பெண்கள் அடங்கிய 291 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது திரிணாமுல் காங்கிரஸ்

கொல்கத்தா : மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி முதல்கட்ட தேர்தல் மார்ச் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும், இறுதி மற்றும் 8-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளும் முக்கிய கட்சிகளாக உள்ளன.

இந்த நிலையில் மாநிலத்தில் உள்ள 294 தொகுதிகளில் 291 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வேட்பாளர்களின் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.50 பெண்கள், 42 இஸ்லாமியர்கள், 79 பட்டியலினத்தவர்,17 பழங்குடியினர் உள்ளிட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.நந்திகிராம் சட்டமன்ற தொகுதியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி போட்டியிடுகிறார்.இதுவரை மம்தா பேனர்ஜி போட்டியிட்டு இருந்த பவானிப்பூர் தொகுதியில் சோவன்தேவ் போட்டியிடுகிறார்.

Related Stories: