பட்டிவீரன்பட்டி அருகே 3 மாதமாக ஜல்லி கொட்டியதோடு நிற்கும் சாலை பணி

பட்டிவீரன்பட்டி : பட்டிவீரன்பட்டி அருகேயுள்ளது நெல்லூர், குப்பிநாயக்கன்பட்டி, நெல்லூர் காலனி, சிங்காரக்கோட்டை. இப்பகுதிகளில் 14வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைக்க ஜல்லி கற்களை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கொட்டினர். அதன்பின் இதுவரை எந்த பணிகளும் நடக்கவில்லை.

இதனால் இப்பகுதி மக்கள் ரோட்டில் நடந்து கூட செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் தற்போது இப்பகுதியில் நெல் அறுவடை நடந்து வருகிறது. இதனால் விவசாயிகள் விளைந்த நெல்லை வாகனங்களில் கொண்டு வர மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். இதுகுறித்து சித்தரேவு ஊராட்சி, ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள், விவசாயிகள் நலன் கருதி சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: