பெதப்பம்பட்டியில் சாலையை ஆக்கிரமித்து செயல்படும் காய்கறி கடைகள்

உடுமலை : உடுமலை அருகே உள்ள பெதப்பம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் வருவாய் அலுவலகம் செல்லும் சாலையின் நடுவில் டிவைடர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சாலையின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து சிலர் காய்கறி கடை வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. ஒன்றிய மற்றும் வருவாய் அலுவலகங்களுக்கு வருவோர் சிரமப்படுகின்றனர்.

இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், செஞ்சேரிமலை சாலையில் காய்கறி கடைகளுக்கான புதிதாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு செல்லாமல் சாலையை ஆக்கிரமித்து கடை வைத்துள்ளனர். இந்த கடைகளை அகற்ற வேண்டும் என்றனர்.

Related Stories:

>