ஏரிக்கரை சாலையில் விழும் நிலையில் மின் கம்பங்கள்-அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்

சேந்தமங்கலம் : எருமப்பட்டி ஒன்றியம் பவித்திரம் பகுதியில் மிகப்பெரிய ஏரி உள்ளது. மழை காலங்களில் கொல்லிமலையில் இருந்து ஏரிக்கு தண்ணீர் வருகிறது. இந்த ஏரியின் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரிக்கரை வழியாக நாமக்கல் - துறையூருக்கு அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலை  வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. ஏரிக்கரையில் சாலையில் நடப்பட்டுள்ள மின்கம்பங்கள், கடந்த சில மாதங்களாக சாய்ந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

 இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், பல முறை மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த மின்கம்பம் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மீது சரிந்தால், பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்படும். எனவே, அசம்பாவிதம் நிகழும் முன்பாக, மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>