×

கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்: இன்று 2 மாநில ஆளுநர்கள்; 1 மாநில முதல்வர்; 2 மத்தியமைச்சர்கள் போட்டுக்கொண்டனர்.!!!

டெல்லி: 2 மாநில ஆளுநர்கள் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா  தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில், முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 3  கோடி முன்களப்  பணியாளர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, ஆக்ஸ்போர்டு பல்கலை.யின் கோவிஷீல்டு  தடுப்பூசியும், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவோக்சின் தடுப்பூசியும்  பயன்படுத்தப்படுகிறது.

இதையடுத்து நாடு முழுவதும் முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுள்ளவர்களுக்கு கடந்த 1-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதன்படி, கடந்த 1-ம் தேதி முதல்நபராக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து, இந்நிலையில் இன்று 5-வது நாளில், 2 மாநில ஆளுநர்கள்,1 மாநில முதல்வர், 2 மத்திய அமைச்சர்கள் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டனர்.

* உத்தரகண்ட் ஆளுநர் பேபி ராணி மவுரியா கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை டெஹ்ராடூனின் டூன் உள்ள மருத்துவமனையில் போட்டுக்கொண்டார்.

* மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யரி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை மும்பையில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் போட்டுக்கொண்டார்.

* ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை ஜெய்ப்பூரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் போட்டுக்கொண்டார்.

* மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை மகாராஷ்டிரா மாநிலம் புனே தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் போட்டுக்கொண்டார்.

* மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை பீகார் மாநிலம் பெகுசாரையில் உள்ள சதர் மருத்துவமனையில் போட்டுக்கொண்டார்.

முதல்நாள்: மார்ச் 1-ம் தேதி

பிரதமர் மோடியை தொடர்ந்து, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பீகார்  முதல்வர் நிதிஷ்குமார், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

2-ம் நாள்: மார்ச் 2-ம் தேதி:

மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், ஹர்ஷ் வர்தன், முக்தார் அப்பாஸ் நக்வி, கிஷன் ரெட்டி, கர்நாடக அமைச்சர்கள் கே.எஸ்.ஈஸ்வரப்பா, பி.சி. பாட்டீல் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், தேசிய மாநாட்டு எம்.பி.பாரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்டார்.

3-ம் நாள்: மார்ச் 3-ம் தேதி:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சிக்கிம் ஆளுநர் கங்கா பிரசாத், மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக், மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்டார்.

4-ம் நாள்: மார்ச் 4-ம் தேதி:

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் மற்றும் அவரது மனைவி குர்ஷரன் கவுர், ஜம்மு-காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, டெல்லி லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது பெற்றோர், இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் உள்ளிட்டோர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்டார்.

Tags : Chief Minister , கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்: இன்று 2 மாநில ஆளுநர்; 1 மாநில முதல்வர்; 2 மத்தியமைச்சர்கள் போட்டுக்கொண்டனர்.!!!
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...