தருமபுரி அருகே நிலைதடுமாறி நெல் வயலில் கவிழ்ந்த சமையல் எண்ணெய் லாரி!: பாத்திரங்களை கொண்டு எண்ணெயை பிடித்து செல்லும் மக்கள்..!!

தருமபுரி: தருமபுரி அருகே நெல் வயலில் சமையல் எண்ணெய் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. தருமபுரி மாவட்ட எல்லை பகுதியில் சமையல் எண்ணெய் பாரம் ஏற்றி சென்ற லாரி ஒன்று சாலையோரம் இருந்த நெல் வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் இருந்து வெளியேறும் சமையல் எண்ணெய் - ஐ பிடிக்க ஏராளமான கிராம மக்கள் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கும்மிடிப்பூண்டியில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ராயகோட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு எண்ணெய் பாரம் ஏற்றிச்சென்ற லாரி தருமபுரி - கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் மேடான பகுதியில் சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள நெல் வயலில் கவிழ்ந்திருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

லாரியில் இருந்து சமையல் எண்ணெய் வெளியேறி வருவதை அறிந்த கிராமமக்கள், கையில் கிடைத்த பாத்திரங்கள், குடங்கள், வாலிகள் என அனைத்தையும் கொண்டு வயல் வெளியில் குவிந்துள்ள எண்ணெயை அள்ளி சென்றனர். ஏராளமான கிராமமக்கள் கிடைத்த அளவிற்கு சமையல் எண்ணெய்யை பாத்திரங்களில் எடுத்து சென்றனர். இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர்தப்பியிருக்கிறார்.

Related Stories:

>