வெள்ளக்கோவில் அருகே மேய்ச்சல் நிலத்தில் தீ விபத்து

வெள்ளக்கோவில் : வெள்ளக்கோவில் அருகே மேய்ச்சல் நிலத்தில் ஏற்பட்ட தீயை, தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

வெள்ளக்கோவில் கரட்டுப்பாளையம் ரோடு, செம்மாண்டாம்பாளையம், சோமசுந்தரம்,48, என்பருக்கு சொந்தமாக நான்கு ஏக்கர் தோட்டம் உள்ளது. இதில் மேய்ச்சலுக்கான புற்கள் மற்றும் பனை மரங்கள் வளர்ந்திருந்தது. இந்நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு மேய்ச்சல் நிலத்தின் ஒரு பகுதியில் திடீர் என்று எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதுபற்றி தகவல் அறிந்த சோமு குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ள கிராம பொதுமக்கள் ஒன்று திரண்டு தண்ணீரைக் கொண்டு வந்து ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் தீயை முற்றிலும் அணைக்க முடியவில்லை. இதுபற்றி தகவல் அறிந்த வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) வேலுச்சாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த புற்கள், பனை மரத்தின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதையடுத்து தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேய்ச்சல் நிலம் முழுவதும் தீயினால் சேதமடைந்தது. 

Related Stories:

>