காமயகவுண்டன்பட்டி அருகே டெங்கு விழிப்புணர்வு

கம்பம் : காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கே.கே.பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கஷாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது.முகாமில், டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொரோனா காய்ச்சலுக்கும் டெங்கு காய்ச்சலுக்கும் உள்ள வித்தியாசங்கள், இரண்டையும் தடுக்கும் வழிமுறைகள், நிலவேம்பு கஷாயத்தின் பயன் பற்றி காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ அலுவலர் சிராஜூதீன் விரிவாக எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் டாக்டர் முருகானந்தம், பள்ளி தலைமை ஆசிரியர் வீரமணி, சுகாதார ஆய்வாளர் அமரேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>