ரசாயனத்துக்கு குட்பை!

நன்றி குங்குமம் தோழி

ஒவ்வொரு மாதம், அந்த மூன்று நாட்கள் என்று சொன்னால், பெண்களின் மனதில் ஒருவித தயக்கம் ஏற்படத்தான் செய்கிறது. என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்து இருந்தாலும், இயற்கையால் ஏற்படும் இந்த பிரச்னைக்கு தீர்வே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். நம் அம்மாக்கள் எல்லாரும் பழைய துணிகளை தான் பயன்படுத்தி வந்தனர். அதை தகர்த்து எறிந்து மார்டன் பெண்கள் எல்லாரும் நேப்கின்களுக்கு மாறினர். ஆனால் இதிலும் பல சிக்கல்கள் உள்ளது. காரணம் அதில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள். இதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை நினைக்கும் போது ஒவ்வொரு பெண்களும் அதை பற்றி சிந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இவர்களின் இந்த பிரச்னைகளுக்கு தீர்வு சொல்ல வருகிறது மங்கை நேப்கின் நிறுவனம். பல ஆண்டுகளுக்கு பிறகு பெண்களுக்காக தேவையை புரிந்து செயல்படுத்தியுள்ளனர்.

மூன்று வருட ஆராய்ச்சியில் உருவான இந்த நேப்கின், Non Bleached எனப்படும் ரசாயன கலவையோ, எந்த ஒரு நிற பூச்சோ (Color Dye) இல்லாமல் துணியினால் பாரம்பரிய முறையில் மூலிகை பூச்சு தடவி, பட்டன் (Button) வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. சந்தையில் கிடைக்கும் நேப்கின்கள் எதுவுமே மூலிகை நேப்கின்கள் என்று சொல்லிட முடியாது. நேப்கின்கள் பொதுவாகவே பளபளக்கும் வெள்ளை நிறத்தில் தான் இருக்கும். ஒரு துணியோ அல்லது பிளாஸ்டிக் பொருளோ ரசாயன கலவை இல்லாமல் வெள்ளையாக மாற்ற முடியாது. வெள்ளை நிற டை ஆபத்தை விளைவிக்காதது என்று சொன்னாலும் அதை நாம் முழுமையாக ஏற்றக் கொள்ள முடியாது. மங்கை நிறுவனம் தன் தயாரிப்பில் பழமையை கையில் எடுத்துள்ளது.  பெண்மையை அக்கறையோடு பாதுகாக்கும் வகையில் இவர்கள் பாரம்பரிய முறையில் மூலிகையை பயன்படுத்தி உற்பத்தி செய்துள்ளனர். அதிகபட்ச பெண்கள் நேப்கினின்  விலைக்குத் தான் முன்னுரிமை தருகிறார்கள். அடுத்த சந்ததியை உருவாக்கும் கருப்பையை பாதுகாக்கும் கடமையை இவர்கள் மறந்து விடுகிறார்கள்.

தொழில்நுட்ப வளர்ச்சியில் இவர்களால் தாங்கள் உபயோகிக்கும் நேப்கின்கள் பற்றி சுலபமாக  தெரிந்துகொள்ள முடியும். ஆனால், அதை தெரிந்து கொள்ளாமல், நேப்கினை பயன்படுத்துவதால் பல வியாதிகளுக்கு ஆளாகிறார்கள். எந்த காசை மிச்சப்படுத்தினார்களோ அதை மருத்துவமனைக்கு  செலுத்துகிறார்கள். குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள் எட்டு முதல் பத்து மணி நேரம் வரை மாற்றாமல் இருக்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும். எல்லாவற்றையும் விட ஆண்கள் தங்கள் வீட்டுப் பெண்களின் மேல் அக்கறை காட்டுவதோடு நில்லாமல், தரமான நேப்கினை பயன்படுத்த வேண்டும் என்று ஆலோசனை வழங்கவும் கடமைப்பட்டுள்ளனர். பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் மங்கை நேப்கின்களை (www.sreemangai.com) உபயோகித்தால் உங்களுக்கே தெரியும், தெரியும் உண்மை. ஆரோக்கியம் முக்கியம் தானே?

-ஷம்ரிதி

× RELATED கமுதியில் ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட 1000 கிலோ மாம்பழம் பறிமுதல்