அந்தியூரில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பாஜக ஊர்வலம்!: 'டாஸ்மாக் ஆட்சி'என சி.டி. ரவி பேசியதால் தொண்டர்கள் குழப்பம்..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தமிழகத்திற்கான பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி ஊர்வலத்தில் பங்கேற்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஓரிரு நாட்களில் முடிவடையும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது உரிய அனுமதி பெறாமல் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பாஜகவினர் 1 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலம் நடத்தினர்.

அந்தியூர் அரசு மருத்துவமனையில் தொடங்கி பத்திரகாளியம்மன் கோவிலில் ஊர்வலம் முடிவுற்றது. அங்கு தெருமுனை பிரச்சாரத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி, உங்களுக்கு வளர்ச்சிக்கு பணி செய்யும் ஆட்சி வேண்டுமா? இல்லை, டாஸ்மாக் ஆட்சி வேண்டுமா? என்று மக்களை நோக்கி கேள்வி எழுப்பினார். அவர் டாஸ்மாக் ஆட்சி என்று யாரை குறிப்பிடுகிறார் என்று கட்சியின் தொண்டர்கள் குழப்பம் அடைந்தனர்.

இதையடுத்து தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் சி.டி. ரவி கலந்துக்கொண்டார். ஆலோசனை கூட்டத்திற்கு பின் தொண்டர்களுடன் ஆட்டம் போட்டு உற்சாகத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஓரிரு நாட்களில் முடிவடையும் என்றார்.

Related Stories: