அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது என தகவல்

சென்னை: அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நிறைவடைந்த நிலையில் இன்று முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரங்கள் முதல் கட்ட பட்டியலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று ஒரே நாளில் அதிமுக சார்பில் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் பெறப்பட்ட விருப்ப மனுக்கள் மீதான நேர்காணல் நேற்று ஒரே நாளில் நடத்தி முடிக்கப்பட்டது.

இந்நிலையில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கக்கூடிய தொகுதிகள் அல்லாமல், நேரடியாக அதிமுக போட்டியிடும் தொகுதிகள், தற்போது அமைச்சர்களாக இருக்கக்கூடியவர்களின் தொகுதிகள், மாவட்ட செயலாளர்களின் தொகுதிகள், பல்வேறு முக்கிய நிர்வாகிகளின் தொகுதிகள் இதேபோன்று விவரங்களை உள்ளடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாக இருக்கிறது.

தற்போதுள்ள 30க்கும் மேற்பட்ட அமைச்சர்களில் குறைந்தது 10லிருந்து 15 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வியும் இருக்கிறது. பெரும்பாலும் மாவட்ட செயலாளர்களுக்கு ஏற்கனவே அவர்கள் வகிக்கக்கூடிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கக்கூடியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு மிக குறைந்த அளவே இருப்பதாக தெரிகிறது.

Related Stories: