சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியல் வருகின்ற 10-ம் தேதி வெளியிடப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியல் வருகின்ற 10-ம் தேதி வெளியிடப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். காணொலி மூலம் நடைபெற்று வரும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6ம் தேதி நடக்க இருக்கிறது. இதனையடுத்து கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தி.மு.க. விரைவுப்படுத்தியுள்ளது. மேலும் விருப்பமனு கொடுத்த தொண்டர்களிடம் நேர்காணலையும் தி.மு.க. நடத்தி வருகிறது.

இதனையடுத்து, இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தை காணொலி காட்சி வழியாக தி.மு.க. நடத்துகிறது. கூட்டம் காலை 9 மணி அளவில் தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். இந்த நிலையில், திமுக வேட்பாளர்களின் பட்டியல் வருகின்ற 10-ம் தேதி வெளியிடப்படும். மேலும், தற்போது வேட்பாளர் தேர்வு, தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்த திமுகவினரிடம் இன்றுடன் நேர்காணல் நிறைவுப் பெற்றது.

Related Stories: