துபாயில் இருந்து கடத்தப்பட்ட 360 கிராம் தங்கம் பறிமுதல்

பெங்களூரு: துபாயில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.17.14 லட்சம் மதிப்பிலான 360 கிராம் தங்கத்தை சுங்கத்துறை  அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். பெங்களூரு விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதை தடுக்கும் பணியில் சுங்கத்துறை அதிகாரிகள்  தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி சமீபத்தில் துபாயில் இருந்து பெங்களூருவிற்கு வந்த விமானத்தில் பயணித்த வாலிபர் ஒருவரின் டிராலி பேக்  மீது சந்தேகம் எழுந்தது. அவரின் டிராலி பேக்கை வாங்கி சோதனை செய்தபோது, அதில் ரேடியம் முலாம் பூசப்பட்டிருந்தது. சந்தேகம் அடைந்த  அதிகாரிகள் டிராலியில் இருந்த கம்பிகள் மற்றும் போல்டுகளை, இராசாயண திரவம் வைத்து ஆய்வு செய்தனர்.

அப்போது ரேடியம் தனியாக பிரிந்து தங்கம் படிந்தது. டிராலிக்கு பயன்படுத்திய ஸ்டீல் மற்றும் போல்ட்டில் தங்கம் இருப்பதை உறுதி செய்த  அதிகாரிகள் இது தொடர்பாக கார்வாரை சேர்ந்த வாலிபரை கைது செய்தனர். இது தொடர்பாக அவர் கொடுத்த தகவலை வைத்து ரூ.17.14 லட்சம்  மதிப்பிலான 360 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கெம்பேகவுடா விமான நிலைய அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: