பயிற்சி முடிந்த 63 பெண் போலீசாருக்கு பதக்கம் வழங்கல்

சிக்கமகளூரு: சிக்கமகளூருவில் பயிற்சி முடித்த 63 பெண் போலீசாருக்கு பதக்கம் வழங்கப்பட்டது. சிக்கமகளூரு,  ராமனஹள்ளியில் உள்ள போலீஸ்  பயிற்சி வளாகத்தில் 8 மாத காலங்களாக பயிற்சி பெற்ற 63 பெண் போலீஸ்சாருக்கு பதக்கம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மேற்கு மண்டல  ஐஜிபி தேவஜோதி ரே மற்றும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அக்ஷய மச்சீந்திரா ஆகியோர் கலந்துகொண்டு பதக்கங்களை வழங்கினர். தொடர்ந்து  கொடுக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியின் போது  மேற்கு மண்டல ஐஜிபி தேவ்ஜோதி ரே பேசியதாவது:,  சமுதாயத்தில் ஜாதி மத பேதம் பார்க்காமல் அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும்.

எந்த சந்தர்ப்பத்திலும்  ஒருவரை தனித்து பார்க்கக்கூடாது சட்டத்தின் அடிப்படையில் வேலை பார்க்க வேண்டும் உங்களை வெவ்வேறு இடங்களுக்கு  பணியில் போடப்பட்ட பொழுது அங்கு கஷ்டமான சூழ்நிலையிலும் பிரச்சனைகளும் வரும் பட்சத்தில் நாம் எப்படி பயிற்சி பெற்றோம் என்பதை  கருத்தில் கொள்ள வேண்டும்.  மக்களுக்கு ஆறுதலாக நீங்கள் நடந்து கொள்ள வேண்டும் மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்து  கஷ்டத்தை புரிந்து  நீங்கள் வேலை செய்ய வேண்டும். உங்களின் அனைத்து கஷ்ட நஷ்டங்களில்,  உங்கள் குடும்பத்தை நினைத்து பணியாற்றினால் மட்டுமே பணியில்  திறம் பெற முன்னேற்றம் அடைய முடியும் இவ்வாறு அவர் கூறினார்.இதே நிகழ்ச்சியில் பயிற்சிபெற்ற 63 பேருக்கும் பதக்கம் வழங்கப்பட்டது. 8 மாத  காலமாக பயிற்சி அளித்த போலீஸ் மூத்த அதிகாரிகளுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.

Related Stories: