பணி நியமனத்தில் ஊழல் என புகார் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் ஓஎஸ்டி வழக்கிலிருந்து விடுவிப்பு

புதுடெல்லி: அரசு குழந்தைகள் மருத்துவமனையில் நியமனம் செய்யப்பட்டதில்  முறைகேடுகள் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், டெல்லி சுகாதார  அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் முன்னாள் ஓஎஸ்டி  டாக்டர் நிகுஞ்ச் அகர்வாலை  டெல்லி நீதிமன்றம்  வழக்கிலிருந்து விடுவித்து  உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்தவமனையான ​​சாச்சா நேரு பால் சிக்கிட்சாலயாவில்  டாக்டர் அனுப் மொஹ்தா இயக்குநராக நியமிக்கப்பட்டபோது,  அவர்,  டாக்டர் நிகுஞ்ச் அகர்வாலை சீனியர் ரெசிடென்ட் (ஆர்த்தோ) பதவிக்கு கடந்த 2015ம் ஆண்டு தற்காலிக அடிப்படையில் நியமிக்க ஒப்புதல்  அளித்தார்.ஆனால், இந்த நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, அவரது நியமனம் சட்டவிரோதமானது என்றும்,  விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை முற்றிலுமாக புறக்கணித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

அதோடு, அவரை நியமித்த சமயத்தில், சி.என்.பி.சி.யில் சீனியர் ரெசிடென்ட் (ஆர்த்தோ) என்கிற பதவியே இல்லை என்றும் அரசு தரப்பு குற்றம்  சாட்டியது. இதுதொடர்பாக கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஊழல் தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.  இந்த வழக்கு நேற்று சிறப்பு நீதிபதி சஞ்சய் பன்சால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் தெரிவிக்கப்படும்  குற்றச்சாட்டுக்களுக்கு எந்வித முகாந்திரமும் இல்லை. எனவே, வழக்கிலிருந்து டாக்டர் நிர்குஞ்ச் அகர்வாலை விடுவிப்பதாக உத்தரவிட்டார்.

Related Stories:

>