×

கொரோனா விதி மீறியவர்களிடமிருந்து ரூ.36 லட்சம் அபராதம் வசூல்

மங்களூரு:  தென்கனரா மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று விதி முறைகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.36 லட்சத்து 17 ஆயிரம் அபராதம்  வசூலிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் ராஜேந்திரா தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தென்கனரா  மாவட்டத்தில் 34,487 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 33,551 பேர் குணமடைந்து வீடு  திரும்பியுள்ளனர். தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. படிப்படியாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள்  பீதியடைய வேண்டாம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. மேலும் பொதுமக்கள் கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசம்  அணிய வேண்டும். விதி மீறியதாக 35,102 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து ரூ.36 லட்சத்து 17 ஆயிரத்து 410  அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.Tags : Corona , A fine of Rs 36 lakh has been levied on violators of the Corona rule
× RELATED பறக்கும் படையால் பறிமுதல்...