தொழிலதிபரிடம் 2 கோடி மிரட்டி பறிக்க முயற்சி: இருவர் கைது

புதுடெல்லி:   டெல்லி ஜனக்புரி ஏரியாவில் செயல்பட்டு வரும் மருந்தக கடையில கெமிஸ்ட் ஆக பணிபுரியும் தீபக் ஷெராவத்(27) மற்றும் அவனுடன்  வேலை செய்யும் சத்தீஷ்குமார்(19) இருவரும் குறுகிய காலத்தில் பணக்காரனமாக மாற திட்டமிட்டனர். இதற்காக அவர்களுக்கு நன்கு தெரிந்த  தொழிலதிபர் ஒருவரை குறிவைத்தனர். அவர் பணம் கறப்பதற்கு எளிதான நபர் என்பதால் அவரை தேர்ந்தெடுத்தனர். திட்டத்தை நிறைவேற்ற புதிதாக  செல்போன் ஒன்றை வாங்கி அலகாபத்தில் சிம் கார்டு பெற்றனர். அதன் மூலம் தொழிலதிபருக்கு கடந்த ஜனவரி 23ம் தேி இருமுறை போன்  செய்தனர். அப்போது தங்களை பெரிய ரவுடி என்றும் 2 கோடி பணம் தர வேண்டும்.

அதனை தயார் செய்ய இரண்டு நாட்கள் அவகாசம் வழங்குவதாகவும் கூறி போன் இணைப்பை துண்டித்தனர். இதையடுத்து, சம்மந்தப்பட்ட  தொழிலதிபர் கடந்த மார்ச் 1ம் தேதி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் தொழிலதிபருக்கு செல்போனில் மிரட்டல் விடு்த்த இருவரை பிடிக்க  போலீசார் தனிப்படை அமைத்து அவர்களது நடமாட்டத்தை கண்காணித்தனர் செல்போன் சிக்னலை கொண்டு ஆய்வு செய்து இருவரையும் ஹரிநகர்  மற்றும் ஜனக்புரியில் கைது செய்துனர். அவர்களுக்கு எதிராக சம்மந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக  கூடுதல் கமிஷனர் சிபேஷ் சிங் தெரிவித்தார்.

கொரோனா விதி மீறியவர்களிடமிருந்து ரூ.36 லட்சம் அபராதம் வசூல்

மங்களூரு:  தென்கனரா மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று விதி முறைகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.36 லட்சத்து 17 ஆயிரம் அபராதம்  வசூலிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் ராஜேந்திரா தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தென்கனரா  மாவட்டத்தில் 34,487 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 33,551 பேர் குணமடைந்து வீடு  திரும்பியுள்ளனர். தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. படிப்படியாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள்  பீதியடைய வேண்டாம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. மேலும் பொதுமக்கள் கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசம்  அணிய வேண்டும். விதி மீறியதாக 35,102 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து ரூ.36 லட்சத்து 17 ஆயிரத்து 410  அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Related Stories:

>