ஐஎஸ்எல் அரையிறுதி முதல் சுற்று கோவா-மும்பை இன்று மோதல்

பதோர்தா : ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் முதல் சுற்று அரையிறுதியின் முதல் ஆட்டத்தில் இன்று எப்சி கோவா-மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதுகின்றன.

ஐஎஸ்எல் கால்பந்து போட்டி நடப்புத் தொடரின் லீக் சுற்றுகள் முடிந்த நிலையில் இன்று முதல் அரையிறுதி சுற்றுப்போட்டிகள் தொடங்குகின்றன. முதல் அரையிறுதியில் மும்பை-கோவா அணிகளும், 2வது அரையிறுதியில் ஏடிகே-நார்த்ஈஸ்ட் அணிகளும் மோதும். ஒவ்வொரு அரையிறுதியிலும்  தலா 2ஆட்டங்கள் நடக்கும். இன்று பதோர்தாவில் நடக்கும் முதல் சுற்று அரையிறுதியின் முதல்  ஆட்டத்தில் கோவா-மும்பை அணிகள் களம் காணுகின்றன. அரையிறுதி வாய்ப்பை கடைசியாக உறுதி செய்த கோவா கடைசியாக விளையாடிய 13 போட்டிகளில் ஒன்றில் கூட தோற்கவில்லை.

அதே நேரத்தில்   லீக் சுற்றில் முதல் இடம் பிடித்த மும்பை கடைசியாக விளையாடிய 6 போட்டிகளில் 3ல் தோல்வியை சந்தித்துள்ளது. நடப்புத் தொடரில் இந்த 2 அணிகளும் மோதிய 2 லீக்  போட்டிகளில்  ஒன்றில் மும்பை வென்றது. மற்றொரு  போட்டி  டிராவானது. ஐஎஸ்எல் தொடரில் இந்த அணிகள் கடைசியாக மோதிய 6 போட்டிகளில் கோவா 3, மும்பை 2 ஆட்டங்களில்  வென்றுள்ளன. ஒருப்போட்டி டிரா.  புள்ளி விவரங்கள் 2 அணிகளுக்கும் சாதகமாக இருந்தாலும் அரையிறுதி யாருக்கு சாதகம் என்பது இன்றும், மார்ச் 8ம் தேதி நடக்கவுள்ள 2வது ஆட்டத்திலும் தெரியும்.

Related Stories:

>