×

போராட்டம் நடத்துபவர்கள் மீது அடக்குமுறை ஒரே நாளில் 38 பேர் சுட்டுக்கொலை: மியான்மரில் ராணுவம் அட்டூழியம்

யங்கூன்: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது நேற்று முன்தினம் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 38 பேர் கொல்லப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. மியான்மரில் கடந்த மாதம் 1ம் தேதி புரட்சி மூலமாக ராணுவம் ஆட்சியை பிடித்தது. இதை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் மக்கள் மீது ராணுவமும், போலீசும் அடக்குமுறையை கையாண்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக நடந்து வரும் போராட்டத்தில் 6 பேர் மட்டுமே சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் கூறப்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே 50 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக ஐநா.கூறி இருக்கிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் போராட்டம் நடத்தியவர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 3 பேரை ராணுவ வீரர்கள் கடுமையாக தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராணுவத்தின் இந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது. ஆனால், 38 பேர் கொல்லப்பட்டதாக நேற்று திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக மியான்மருக்கான ஐநா சிறப்பு தூதர் கிரிஸ்டின் ஸ்ச்ரேனர் பர்ஜினர் கூறுகையில், “பிப்ரவரி 1ம் தேதி ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகு நடத்தப்பட்ட மிகவும் கொடூரமான தாக்குதல் இதுவாகும். இது, ரத்தகளரியான நாள்.  ஒரே நாளில் 38 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்,” என்றார்.



Tags : Myanmar , Struggle, 38 people, shot dead, army in Myanmar
× RELATED அதிக தேர்தல் பத்திரங்கள் வாங்கிய...