×

நக்சல் தாக்குதல் 3 வீரர்கள் பலி

ராஞ்சி: ஜார்கண்ட்டில் நக்சல்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சல்களை ஒடுக்கும் நடவடிக்கைகளில் மாநில போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். மேற்கு சிங்பும் மாவட்டத்தில் ஹோயாது கிராமத்தில்  நேற்று காலை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, நக்சல்கள் சக்தி வாய்ந்த வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் மாநில காவல்துறையின் சிறப்பு பிரிவை சேர்ந்த 3 போலீசார் உயிரிழந்தனர். மேலும், போலீசார் மற்றும் சிஆர்பிஎப் வீரர் ஒருவரும் காயமடைந்தனர்.

Tags : Naxal, attack, 3, killed
× RELATED சட்டீஸ்கரில் நக்சல்களால் கடத்தப்பட்ட வீரர் விடுதலை