ஆந்திராவில் இருந்து ரயிலில் சென்னை வந்த பணியிடம் ரூ.4.18 லட்சம் பறிமுதல்: பறக்கும் படையிடம் ஒப்படைப்பு

சென்னை: ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் கிஷோர். இவர், கடந்த 3ம் தேதி ரயில் மூலம் குண்டூரில் இருந்து சென்னை சென்டரல் ரயில் நிலையம் வந்துள்ளார். ரயில்வே காவல் துறையினர் அவரை சோதனை செய்தபோது, உரிய ஆவணங்கள் இன்றி ₹4.18 லட்சம் வைத்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக துறைமுகம் தொகுதி தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து, அந்த பணத்தை பறிமுதல் செய்து தண்டையார்பேட்டை சார்பு கரூவூலத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories:

>