தேர்தல் செலவுக்கு பணம் தர மாட்டோம் கைவிரித்த கமல் கட்சி

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தவர்களிடம் கட்சி தலைவர் கமல் தலைமையிலான குழுவினர் நேர்காணல் நடத்தி வருகின்றனர். இதில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்தவர்கள் பங்கேற்றனர். அவர்களிடம் நேர்காணலின் போது, வேட்பாளர்களின் தகுதி விவரங்கள், கள நிலவரம் போன்றவற்றை கேட்டுள்ளனர். மேலும் தேர்தல் செலவிற்கு கட்சி சார்பில் பணம் எதிர்பார்க்கக் கூடாது. நீங்களே செலவு செய்து கொள்ள வேண்டும்.

தேர்தல் ஆணையம் அறிவித்த தொகைக்குள் செலவு செய்து பிரசாரம் செய்ய வேண்டும் என கறாராக தெரிவித்து விட்டனராம். விண்ணப்பம் செய்த சிலர் தங்களுக்கு சீட் ஒதுக்காவிட்டால் மக்களிடம் பிரபலமான நட்சத்திர அந்தஸ்துள்ள நபர்களையோ, உள்ளூரில் பிரபலமான நபர்களையோ வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களை நிறுத்த வேண்டாம் எனவும் தலைமையிடம் வேண்டுகோள் வைத்துள்ளனர். அவசரப்பட்டு விருப்பமனு தாக்கல் செய்த பலர் சீட் கொடுத்தால் செலவுக்கு எங்கே போவோம் என கையை பிசைந்து வருகின்றனர்.

Related Stories: