தங்கம் விலையில் மேலும் மாற்றம் சவரன் ரூ.376 குறைந்தது: பவுன் ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது

சென்னை: தங்கம் விலை நேற்று மேலும் குறைந்தது. அதே நேரத்தில் ஒரு சவரன் தங்கம் 34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. மத்திய அரசின் பட்ஜெட் கடந்த மாதம் 2ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி இரண்டரை சதவீதம் குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தங்கம் விலை தொடர்ந்து 4 நாட்களில் பவுன் ரூ.1,360 அளவுக்கு குறைந்தது. அதன் பிறகு தங்கம் விலை சற்று ஏறுவதும், இறக்குவதுமான போக்கு காணப்பட்டு வந்தது. கடந்த 1ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.4,342க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.34,736க்கும் விற்கப்பட்டது. 2ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.56 குறைந்து ஒரு கிராம் ரூ.4,286க்கும், சவரனுக்கு ரூ.448 குறைந்து ஒரு சவரன் ரூ.34,288க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை மேலும் சரிந்தது. கிராமுக்கு ரூ.22 குறைந்து ஒரு கிராம் ரூ.4264க்கும், சவரனுக்கு ரூ.176 குறைந்து ஒரு சவரன் ரூ.34,112க்கும் விற்கப்பட்டது.

இந்த நிலையில் தொடர்ந்து 3வது நாளாக நேற்று காலையும் தங்கம் விலை சரிவை சந்தித்தது. அதாவது கிராமுக்கு ரூ.26 குறைந்து ஒரு கிராம் ரூ.4238க்கும், சவரனுக்கு ரூ.208 குறைந்து ஒரு சவரன் ரூ.33,904க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை மேலும் சரிந்தது. அதாவது நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு ரூ.47 குறைந்து ஒரு கிராம் ரூ.4217க்கும், சவரனுக்கு ரூ.376 குறைந்து ஒரு சவரன் ரூ.33736க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் சவரன் 34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியுள்ளது. தொடர்ந்து 3 நாட்களில் மட்டும் சவரன் ரூ.1104 அளவுக்கு குறைந்துள்ளது. தங்கம் விலை குறைந்துள்ளது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விலை குறைவால் நேற்று காலை முதல் நகைக்கடைகளில் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது.

Related Stories: