தேமுதிக சார்பில் போட்டியிட பிரேமலதா விருப்ப மனு: நேர்காணல் நாளை தொடக்கம்தேமுதிக சார்பில் போட்டியிட பிரேமலதா விருப்ப மனு: நேர்காணல் நாளை தொடக்கம்

சென்னை: தேமுதிக சார்பில் போட்டியிட பிரேமலதா நேற்று விருப்ப மனு தாக்கல் செய்தார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கு கடந்த 25ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது. 5ம் தேதி (இன்று) மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. விருப்ப மனு அளிக்க தொடங்கிய முதல் நாளில் விருப்ப மனு வாங்க கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதன் பிறகு விருப்ப மனுக்களை வாங்க தொண்டர்கள் ஆர்வம் காட்டவில்லை. ஏதோ பெயரளவுக்கு விருப்ப மனுக்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விருப்ப மனு தாக்கல் செய்தார். அதில் எந்த தொகுதி என்பதை குறிப்பிடாமல் விருப்ப மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. முதல் முறையாக தேர்தலில் போட்டியிட பிரேமலதா விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விருப்ப மனு அளித்தவர்களிடம் 6ம் தேதி (நாளை) முதல் 8ம் தேதி வரை நேர்காணல் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>