சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரையில் மு.க.ஸ்டாலின் 6ம் கட்ட சுற்றுப்பயணம்: வருகிற 12ம் தேதி தொடங்குகிறார்

சென்னை: சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரையில் மு.க.ஸ்டாலின் 6ம் கட்ட சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வருகிற 12ம் தேதி தனது பயணத்தை தொடங்கும் மு.க.ஸ்டாலின் மக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெறுகிறார்.

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் சட்டமன்ற தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து வருகிறார். இதுவரை 5 கட்டமாக உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் முடித்து உள்ளார். அப்போது அந்தந்த மாவட்டத்துக்கு உட்பட்ட அந்தத் தொகுதியைச் சேர்ந்த, கிராமம் மற்றும் வார்டு பகுதிகளை சேர்ந்த மக்களிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனுக்களை பெற்றார். மேலும் மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் வருகிற 12ம் தேதி முதல் 13ம் தேதி வரை 6ம் கட்டமாக பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

இது குறித்து திமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: ”உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 6ம் கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். அதன்படி 12ம் தேதி காலை 9 மணிக்கு சேலம் கிழக்கு, ேசலம் மத்திய மாவட்டம் சார்பில் மதன்லால் மைதானம்,  சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை, சீலநாயக்கன்நாயக்கன்பட்டி, சேலம் தெற்கு. மதியம் 1 மணி நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு மாவட்டம் சார்பில் ஸ்ரீலட்சுமி திருமண மகால் அருகில், பொம்மைகுட்டைமேடு, சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை, நாமக்கல். மாலை 5 மணியளவில் கரூர் மாவட்டம் சார்பில் ராயனூரில் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். 13ம் தேதி காலை 9 மணி திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு மாவட்டம் சார்பில் பித்தளைப்பட்டி பிரிவு, திண்டுக்கல்-வத்தலக்குண்டு, மெயின் ரோடு, ஆத்தூர். பகல் 12 மணி மதுரை மாநகர் வடக்கு, மதுரை மாநகர் தெற்கு மாவட்டம் சார்பில் சி.எஸ்.ஐ.வளாகம், மூன்று மாவடி, கே.புதூர் மதுரையில் நடைபெறும் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: