மொய் விருந்து நடத்த கூடாது; திருமணம், காதணி விழாவுக்கு அனுமதி பெற வேண்டும்: தேர்தல் அதிகாரி உத்தரவு

பேராவூரணி: தேர்தல் முடியும் வரை மொய்விருந்து நடத்தகூடாது. காதணி, திருமண விழாக்களை, வருவாய்த்துறையினர் அனுமதி பெற்றே நடத்த வேண்டும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள், தேர்தல் பணி, கடமைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், பேராவூரணி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் முத்திரைத்தாள் கட்டணம் தனித்துணை ஆட்சியருமான ஐவண்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தேர்தலை நேர்மையாகவும், நடுநிலையோடும் நடத்த வேண்டும். அனைத்து அரசியல் கட்சியினரையும் சமமாக நடத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து திருமண மண்டப உரிமையாளர்கள், அச்சக உரிமையாளர்கள், பான் புரோக்கர், பிளக்ஸ் உரிமையாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஐவண்ணன் பேசியதாவது: மொய் விருந்து விழாக்களை வாக்குப்பதிவு முடியும்வரை தள்ளி வைக்க வேண்டும். ஆட்சேபகரமான நோட்டீஸ் அச்சிடக்கூடாது. நோட்டீஸ் அச்சடிக்கும் நிறுவனத்தின் பெயர், நோட்டீஸ் எண்ணிக்கை குறிப்பிட வேண்டும். பிளக்ஸ் பேனர்கள் வைக்க அனுமதி இல்லை, மீறி வைத்தால் உடனடியாக பறிமுதல் செய்யப்படும். காதணி, திருமண விழாக்கள் ஏற்கனவே தேர்தலுக்கு முன் தேதி நிச்சயிக்கப்பட்டிருந்தால் விழாக்களை, வருவாய்த்துறையினர் அனுமதி பெற்றே நடத்த வேண்டும். விருந்து விழாக்கள் போலியாக நடத்தினாலோ, கணக்கின்றி பணம் கூடுதலாக புழங்கினாலோ தேர்தல் நடத்தை விதிமுறைப்படி, பணம் பறிமுதல் செய்யப்படும்.

பான் புரோக்கர் மூலம் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் வந்தால், தயவு தாட்சண்யம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சரியான கணக்கு வழக்குகளை பராமரிக்க வேண்டும் என்றார். பின்னர், அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள ₹30 லட்சத்துக்குள் தான் செலவு செய்ய வேண்டும். வேட்பாளர் செலவுகளை அதற்கான குழு கண்காணிக்கும். 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், கொரோனா பாதித்தவர்கள் விரும்பினால் தபால் வாக்குகள் வீடு சென்று பெறப்படும். அப்போது வேட்பாளர்களின் முகவர்கள் உடன் வரலாம் என்றார்.

Related Stories:

>