
பெரம்பூர்: காஞ்சிபுரம் மாவட்டம், அச்சரப்பாக்கம், எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் திருமலை (22). இவருக்கும், சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த 18 வயது சிறுமிக்கும் செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் காதலாக மாறியது. இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஆசைவார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். கட்டாயப்படுத்தி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இதன் காரணமாக சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்து 4 மாதம் ஆகிறது.
அதன்பிறகு வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். தன்னைவிட்டு பிரிந்து செல்லும்படி சிறுமிக்கு திருமலை கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இதுகுறித்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி புகார் செய்துள்ளார். போலீசார் போக்சோ சட்டத்தில் திருமலையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.