×

ராயப்பேட்டையில் தனியாக வசித்த 75 வயது மூதாட்டி பணத்திற்காக அடித்து கொடூர கொலை?: உடலில் ரத்தக்காயங்கள்; போலீஸ் விசாரணை

சென்னை: தனியாக வசித்து வந்த 75 வயது மூதாட்டி ஒருவர் தலையில் ரத்த காயத்துடன் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இவர் பணத்திற்காக அடித்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை ராயப்பட்டை ரோட்டரி நகர் 3வது தெருவை சேர்ந்தவர் ஆதிலட்சுமி(75). திருமணம் ஆகாத அவர் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், இன்று காலை ஆதிலட்சுமி வெகு நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர்.

அப்போது அவர் ரத்த வெள்ளத்தில் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ராயப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி விரைந்து வந்த போலீசார் மர்மமான முறையில் இறந்துகிடந்த மூதாட்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் தனியாக வசித்து வந்த ஆதிலட்சுமி அதிகளவில் பணம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பணத்தை பறிக்கும் நோக்கில் ஆதிலட்சுமியை மர்ம நபர்கள் யாரோ அடித்து கொலை ெசய்துவிட்டு பணத்தை கொள்ளையடித்து ெசன்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் ரோட்டரி தெருவில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று மூதாட்டி வீட்டிற்கு வந்து சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : 75-year-old woman living alone in Rayapettai brutally murdered for money ?: Bruises on body; Police investigation
× RELATED வீட்டில் தனியாக தூங்கிய 75 வயது...