இன்றும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. தேமுதிகவுக்கு 15 சீட்கள் மட்டுமே என அதிமுக திடீர் நிபந்தனை : விஜயகாந்த் அதிர்ச்சி

சென்னை : தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு வர தயக்கம் காட்டியதை அடுத்து தேமுதிகவிற்கு 15 சீட்கள் மட்டுமே தர அதிமுக சம்மதித்துள்ளது. அதே நேரத்தில் நாங்கள் வழங்கும் தொகுதியில் தான் போட்டியிட வேண்டும் என்றும் அதிமுக நிபந்தனை விதித்துள்ளது. இதனால் விஜயகாந்த் அதிர்ச்சி அடைந்துள்ளார்.ஜெயலலிதா இருந்த போது தேமுதிகவுக்கு ஒதுக்கிய 41 தொகுதிகளை மீண்டும் எங்களுக்கு வழங்க வேண்டும் என்று விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் வற்புறுத்தி வருகின்றனர். அந்த தொகுதிகளை பெறுவதில் தேமுதிக பிடிவாதமாக இருந்தது. அதிக தொகுதிகளை கேட்டதால் அதிமுக அவர்களை கண்டுகொள்ளவில்லை. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக தொடங்கியது. அதில் பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியது. தொடர்ந்து பாஜகவுடன் பலகட்டமாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நீண்ட காலமாக கண்டுகொள்ளாமல் இருந்த தேமுதிகவை தேர்தல் நெருங்கி வருவதால், திடீரென அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து பேசினர். அப்போது, பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதே போல எங்களுக்கும் ஒதுக்க வேண்டும். குறைந்த பட்சம் 20 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தினார். ஆனால், அமைச்சர்கள் 10 தொகுதிகள் தான் தர முடியும் என்று அழுத்தம் திருத்தமாக கூறி விட்டனர். இதனை தேமுதிக தரப்பில் ஏற்றுக்கொள்ளவில்லை.

தொடர்ந்து அவர்கள் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட், விஜயகாந்த் மகனுக்கு விருகம்பாக்கம் தொகுதியை தர வேண்டும். தேர்தல் செலவுக்கு பாமகவுக்கு இணையாக பணம் தர வேண்டும் என்று 3 கோரிக்கையை முன்வைத்தனர். அப்போது முதல்வர் 10 தொகுதிகள் வரை தர சம்மதித்தார். ராஜ்யசபா எம்பி சீட் குறித்து இப்போது பேச வேண்டாம். தேர்தல் முடிந்ததும் பேசி கொள்ளலாம் என்று கூறி விட்டார். விருகம்பாக்கம் தொகுதியை நீங்கள் எடுத்து கொள்ளலாம் என்று அப்போது முதல்வர் தெரிவித்தார். தேர்தல் செலவு தொடர்பாக அமைச்சர் தங்கமணியிடம் டீல் செய்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டார்.இதைத் தொடர்ந்து தேமுதிகவினர் அமைச்சர் தங்கமணியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். அப்போது கேட்கும் பணத்தை தர முடியாது. நாங்கள் தரும் பணத்தை தான் வாங்கி கொள்ள வேண்டும் என்று அமைச்சர் தங்கமணி கூறிவிட்டதாக தகவல் வெளியானது. இதை தேமுதிகவினர் ஏற்றுக்கொள்ளவில்லை. மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அதிமுக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இன்று வரை 3 முறை அவர்கள் அழைத்தும் தேமுதிகவினர் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை.

இந்த நிலையில் திடீரென அதிமுக தரப்பில் 15 தொகுதிகளை வழங்குகிறோம். ராஜ்ய சபா எம்பி சீட் கிடையாது. கேட்கும் தொகுதிகளை தர முடியாது. தேர்தல் செலவுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம். இதற்கு சம்மதம் என்றால் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்தனர். ஆனால், தேமுதிகவினர் 20 தொகுதிகளை கட்டாயம் தர வேண்டும். எம்பி சீட் வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்து வருகின்றனர்.இந்த நிலையில் தேமுதிக துணை பொது செயலாளர் எல்.கே.சுதீஷ் தேமுதிக கூட்டத்தில் பேசிய பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, ‘‘கூட்டணிக்காக அதிமுக தான் கெஞ்சுகிறது. நாம் அவர்களை கெஞ்சவில்லை. 2011 தேர்தலில் தேமுதிக அதிமுக கூட்டணியில் இல்லை எனில் அதிமுக என்ற கட்சியே இருக்காது” என்று அதிரடியாக பேசினார்.

இந்த பேச்சு அதிமுகவினரை மேலும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. வாக்கு வங்கியே இல்லாமல் அதிமுகவை தொடர்ந்து தேமுதிகவினர் மிரட்டி வருகின்றனர். இனிமேல் வந்தால் வரட்டும். வராவிட்டால் எதுவும் நடக்க போவதில்லை என்றும் அதிமுகவினர் கூறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் 15 தொகுதிகள் தரலாம். அதற்கு மேல் கேட்டால் கூட்டணியில் நீங்கள் இருக்க வேண்டுமா? என்பதை அதிமுக பரிசீலிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அதிமுக கூறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அதிமுக கூட்டணியில் தேமுதிக சேருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்தும் தேமுதிக ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.இந்த நிலையில்  இன்று காலை சென்னை கோயம்பேடில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவ சர ஆலோசனை கூட்டம் நடந்தது. அடுத்தக் கட் டமாக என்ன முடிவு எடுக்கலாம் என ஆலோ சிக்கப்பட்டது.

Related Stories:

>