மதுரை அருகே தேர்வுக் கட்டணத்தை தீடிரென உயர்த்திய தனியார் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் முற்றுகை போராட்டம்

மதுரை: மதுரை அருகே தேர்வுக் கட்டணத்தை தீடிரென உயர்த்திய தனியார் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகமலை புதுக்கோட்டையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் 1,000 மாணவர்கள் படித்துவருகின்றனர். கொரோனா தோற்று அச்சத்தால் மூடப்பட்டிருந்த கல்லூரி அன்மையில் திறக்கப்பட்டு தற்போது வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆனால் தங்களுக்கு எந்த வித முன் அறிவிப்பும் செய்யாமல் செமஸ்டர் தேர்வு கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவர்கள் கல்லூரி வாசல்முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக மாணவர்கள் கூறுகின்றனர். செமஸ்டர் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால்  தங்களில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

செமஸ்டர் தேர்வு கட்டணம், கல்லூரி பராமரிப்பு கட்டணம் என கூறி கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே உடனே கல்வி கட்டணத்தை குறைத்து மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: