தென் மாவட்டங்களில் வருகின்ற மார்ச் 6,7,8 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழக தென் மாவட்டங்களில் வருகின்ற மார்ச் 6,7,8 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் , புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாளை வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 06.03.2021 மற்றும் 07.03.2021 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 08.03.2021 தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழகம் உள்பட பல்வேறு இடங்களில் நேற்று வெயில் வாட்டி எடுத்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

Related Stories: