கொரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம்...! முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதி: தேர்தல் ஆணையர் அறிவிப்பு

சென்னை: முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். வாக்குப்பதிவு அன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் பிபிஇ கிட் அணிந்து வாக்களிக்கலாம், மேலும், தமிழகம் முழுவதும் மார்ச் 3ம் தேதி வரை 11 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனாவின் தீவிரம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ள நிலையில், தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.

நேற்று சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி 489 பேருக்கு ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,52,967 ஆக அதிகரித்துள்ளது. எனவே கொரோனா தொற்றிலிருந்து வாக்காளர்களையும், தேர்தல் நடத்தும் அதிகாரிகளையும் பாதுகாப்பது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில் வாக்களிக்க வரும் வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே தங்களுடைய வாக்குகளை பதிவு செய்யப்பட அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கடைசி ஒரு மணிநேரத்தில் தேர்தல் ஆணையம் மூலமாக வழங்கப்படும் பிபிஇ கிட்டை அணிந்து வந்து வாக்களிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. அதாவது பிற வாக்காளர்களுக்கு காலை 7 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் வாக்குப்பதிவில் வாக்காளர்களும், 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பிபிஇ கிட் அணிந்து வாக்களிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் மார்ச் 3ம் தேதி வரை 11 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Related Stories:

>