தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி, காந்திய மக்கள் இயக்கம் போட்டியில்லை...! கட்சி தலைமை அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி, காந்திய மக்கள் இயக்கம் ஆகிய கட்சிகள் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளன. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தேர்தலையொட்டி எடுக்கப்படும் வழக்கமான பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி, காந்திய மக்கள் இயக்கம் ஆகிய காட்சிகள் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளன.

ஆம் ஆத்மி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாது என்று அக்கட்சியின் தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யத்துடன் ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடாது என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

காந்திய மக்கள் இயக்கம்

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை காந்திய மக்கள் இயக்கம் முற்றாக புறக்கணிக்கிறது என, அந்த இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். களத்தில் நிற்கும் எந்தக் கட்சியின் மீதும் நம்பிக்கை இல்லாததால் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை காந்திய மக்கள் இயக்கம் முற்றாக புறக்கணிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>