வேட்பாளராக யார் அறிவிக்கப்பட்டாலும் அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்..! முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

சென்னை: யார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்று வருகிறது. இந்த நேர்காணல் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்று வருகிறது.

அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட கடந்த 8 நாட்களில் 7,967 விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, பேசிய முதல்வர் பழனிசாமி கூறியதாவது; 5 மாவட்டங்களுக்கு ஒருங்கிணைந்த வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது. யார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு வழங்கப்டும் என அவர் உறுதி அளித்துள்ளார்.

நேர்காணலில் அவை தலைவர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விருப்ப மனு அளித்தவர்களை குழுக்களாக பிரித்து நேர்காணல் நடத்த திட்டமிட்டுள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முதல்கட்டமாக நேர்காணல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று ஒரே நாளில் நேர்காணலை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

Related Stories:

>