சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியதை முழுமனதோடு வரவேற்கிறேன் : எல். முருகன்

சென்னை: அரசியலிலிருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவித்துள்ள நிலையில், அவரது முடிவை பாஜக வரவேற்பதாகத் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சசிகலா அரசியலிலிருந்து ஒதுங்கும் அறிவிப்பை வரவேற்கிறேன். அவர் சொல்லியிருக்கிற காரணங்களை அரசியல் ரீதியாக அனைவரும் வரவேற்க வேண்டும்.

ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தொடர வேண்டும் என்று, அவருடைய விருப்பங்களையும் தெரிவித்திருக்கிறார்.

அவரால் அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி எப்படியாவது தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று கனவு கண்டவர்களுக்கு எல்லாம் மிகப்பெரிய ஏமாற்றத்தைத் தந்திருக்கிறார். அவருடைய அறிவிப்பை முழுமனதோடு வரவேற்கிறேன் என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>