தொடர்ந்து குறையும் குணமடைந்தோர் விகிதம்... தினசரி உயிரிழப்பு எண்ணிக்கையும் 100க்கு கீழே சென்றது : இந்தியாவில் கொரோனா நிலவரம்!!

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.57 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 1.11 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 17,407 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,11,56,923 ஆக உயர்ந்தது.

* புதிதாக 89 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,57,435 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 14,031 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,08,26,075 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,73,413 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

*இந்தியாவில் 1,66,16,048 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

* குணமடைந்தோர் விகிதம் 97.03% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.41% ஆக குறைந்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.55% ஆக குறைந்துள்ளது.

Related Stories:

>