விலங்குகளையும், அவற்றிற்கான வாழ்விடங்களையும் உறுதிப்படுத்த வேண்டும்..! உலக வனவிலங்குகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ட்வீட்

டெல்லி: விலங்குகளையும், அவற்றிற்கான வாழ்விடங்களையும் உறுதிப்படுத்த வேண்டும் என உலக வனவிலங்குகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.  காடுகளின் பாதுகாப்பையும் விலங்குகளுக்கான பாதுகாப்பான வாழ்விடங்களையும் உறுதிப்படுத்த நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

உலக வனவிலங்குகள் நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வனவிலங்குகள் பாதுகாப்பிற்காக உழைக்கும் அனைவருக்கும் வணக்கத்தைக் கூறியுள்ள அவர், சிங்கம், புலி, சிறுத்தைகளின் எண்ணிக்கை சீராக உயர்ந்து வருவதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>