விடாமல் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்...! உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 11.57 கோடியை தாண்டியது: 25.70 லட்சம் பேர் உயிரிழப்பு

ஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25.70 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,570,380 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 115,743,688 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 91,458,775 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 90,047 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.  தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.57 கோடியை தாண்டி உள்ளது.

இதன்படி உலகம் முழுவதும் தற்போது 11,57,42,774-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 9,14,57,579- பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 25 லட்சத்து 70 ஆயிரத்து 360- பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 2,17,14,852-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 90,048 -பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 63,759 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசிலில் 74,376 பேருக்கும், ரஷ்யாவில் 10,535 பேருக்கும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: