நாங்க சிங்கக் கூட்டம் டிடிவி குள்ளநரிக் கூட்டம்: போட்டு தாக்கும் அமைச்சர் ஜெயக்குமார்

நாங்க சிங்கக் கூட்டம். டிடிவி குள்ளநரிக் கூட்டம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கடுமையான தாக்குலை தொடுத்தார். இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜ தலையிட்டது இல்லை. பாஜ நெருக்கடி கொடுப்பதாக சொல்வது 100 சதவீதம் வதந்தி. சசிகலாவை கட்சியில் இணைப்பது குறித்து யாரும் எங்களை கட்டாயப்படுத்த முடியாது. அதிமுகவில் சசிகலா, டி.டி.வி.தினகரனை இணைக்க சாத்தியமில்லை. நாங்கள் சிங்கக் கூட்டம். டிடிவி.தினகரன் மற்றும் அவருடன் இருப்பவர்கள் நரிக் கூட்டம்.

சிங்கங்களின் கூட்டமெங்கே? குள்ள நரிகள் கூட்டங்கள் எங்கே? அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் யாரும் தலையிட முடியாது. யாரை கட்சியில் சேர்ப்பது, நீக்குவது என்பது அதிமுகவின் உட்கட்சி விவகாரம். சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது என்பது பாஜவின் யோசனையாக இருக்கலாம். அதை நிராகரித்து விட்டோம். சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை. கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுக, பாஜ பேச்சுவார்த்தையின்போது அமமுகவை சேர்க்க வேண்டும் என்று அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தினர். இந்த பிரச்னை சில நாட்களாக நீடித்தது. இதனால் சில நாட்களாக அமைதியாக இருந்த ஜெயக்குமார், இப்போது டிடிவி.தினகரனை மீண்டும் போட்டுத் தாக்க தொடங்கிவிட்டார்.

Related Stories: