இலை கட்சியில் ஒரு தொகுதிக்கு 3 பேர் சண்டை

திருப்பத்தூர் மாவட்டத்துல இலை கட்சியோட முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ் மீண்டும் இந்த தொகுதியில போட்டியிட சீட் கேட்குறாராம். அதுக்கான முயற்சிகளையும் செஞ்சி வர்றாராம். புதிய வேட்பாளராக டாக்டர் திருப்பதியும் களமிறங்கியிருக்காரு. அதனை தொடர்ந்து, போனமுறை, தேர்தல்ல தோல்வியடைஞ்ச அதிமுக நகரச் செயலாளர் டி.டி.குமாரு ஆகிய 3 பேரும் மும்முனைப் போட்டியா, எனக்குத்தான் சீட் வேண்டும்னு அடம் பிடிக்கிறாங்களாம். இதுல, முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ், ‘எனக்கு சீட்டு கிடைக்கலன்னா? வேற யாருக்கும் சீட் கிடைக்கக்கூடாது’ன்னு உள்குத்து வேலை பார்த்து வர்றாராம்.

இந்த மேட்டரை இலைகட்சியில அரசல் புரசலா பேசிக்கிறாங்க. அதோடு, தற்போது இலையோட, பழத்தின் கூட்டணி உறுதியானதால, மீண்டும் திருப்பத்தூர் தொகுதி பழத்துக்கு ஒதுக்கிடுவாங்களோன்னு உள்ளுர் இலை கட்சிக்காரங்க அச்சத்துல இருக்காங்களாம். ஏற்கனவே 3 பேர் போட்டிக்கு நிக்க, இந்த மேட்டர் வந்ததுல இருந்து இலை கட்சிக்காரங்க வயித்துல புளிய கரைக்குதாம். போட்டி இப்படி இருக்க, ஒரு வேளை, பழத்துக்கு தொகுதிய ஒதுக்கிட்டா? இவங்க கூட்டணிக்கு வேலை செய்வாங்களான்னு தெரியலையேன்னு பழக்கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க.

Related Stories:

>