உள்ளூர்காரங்களுக்கு சீட் கொடுங்கப்பா... சுவரொட்டி ஒட்டி நூதன கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட பலரும் களத்தில் குதித்துள்ளனர். பல்வேறு கட்சியினர் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். முக்கியமாக வெளியூரை சேர்ந்த சிலரும் சீட் கேட்டு இலை கட்சி தலைமையிடம் காய் நகர்த்தி வருகின்றனர். ஆனால், ஊத்தங்கரை தொகுதிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் உள்ளூர்வாசிகளுக்கே சீட் ஒதுக்க வேண்டுமென ஊத்தங்கரை நகர்ப் பகுதியில் தற்போது சுவரொட்டிகள் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளன. இந்திய குடியரசு கட்சியினர்தான் இந்த சுவரொட்டிகளை ஒட்டியிருக்கிறார்கள்.

‘தொழில் வளர்ச்சி அடையவும், மென்மேலும் கல்வி வளர்ச்சி அடையவும், சமூக இறையாண்மை வளர்ச்சி அடையவும், கடந்த காலங்களில் பறிபோன அனைத்து உரிமைகளை திரும்பப் பெறவும், ஊத்தங்கரை தனித்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், மண்ணின் மைந்தர்களாக உள்ள ஊத்தங்கரை தொகுதி மக்களுக்கே அனைத்து அரசியல் கட்சிகளும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>