‘டெம்போ’ ஏத்த டெம்போ வருமா?

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியினர் டெம்போ வேன்களை அமர்த்தி, பல கோடி ரூபாய் தொகையுடன் மதுரை, தேனி உட்பட தென் மாவட்டம் முழுக்க ஊரெல்லாம் வலம் வந்தனர். தொகையை கட்சி ஒன்றிய, நகர, பேரூராட்சி என ஒரு பகுதியையும் விடாமல் விநியோகம் நடத்தி உள்ளனர். இப்படி அள்ளி வீசி, பட்டுவாடா நடத்தியும் ஆளுங்கட்சியினரால் ஒற்றைத் தொகுதியை மட்டுமே போராடி எட்டிப் பிடிக்க முடிந்தது.

இப்போதும், ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகள் டெம்போ குறையாமல், ஓட்டுகளுக்கென தேர்தல் விநியோக வேலை செய்திட டெம்போ வாகனம் வரும் நம்பிக்கையில் காத்திருக்கின்றனர். ஆனால். எதிர்க்கட்சியினர் இம்முறை இந்த வேலையை நடத்த விடமாட்டோம் என தீவிரம் காட்டி வருவதால், விநியோக வழிகளை மாற்றி யோசித்திருப்பதாகவும் ஆளும்தரப்பை சேர்ந்த சிலர் தெரிவிக்கின்றனர்.

Related Stories:

>