‘பூம்புகாரை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றியுள்ளேன்’

எம்எல்ஏ பவுன்ராஜ் கூறும்போது, ‘பூம்புகாரில் ரூ220 கோடி செலவிலும், தரங்கம்பாடியில்  ₹120 கோடி செலவிலும் மீன்பிடி துறைமுகங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. பொறையாரில் உப்பனாற்றில் 100 ஆண்டு பழமையான பாலம் அகற்றப்பட்டு புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. பூம்புகார் தொகுதியில் 34 பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. தரங்கம்பாடி - மங்கநல்லூர் செல்லும் பாதை இரு வழி சாலையாக தரம் உயர்த்தப்பட்டு அகலப்படுத்தப்பட்டுள்ளது.

வீரசோழன், மகிமலையாறு, மஞ்சலாறு உள்ளிட்ட ஆறுகள் முழுமையாக தூர்வாரப்பட்டுள்ளன. நெடுஞ்சாலை மற்றும் கிராமப்புற சாலைகள் தார் சாலையாக மாற்றப்பட்டுள்ளன. தொகுதியில் உள்ள நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளியாகவும், உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories:

>